Prodigy, ஆப்பிள் போன்ற புத்தகக் கடைகளில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கூட்டம் அதிகம் இருக்கும். பெரும்பாலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புத்தகம் வாங்குவதில் பெரிய வார்த்தை யுத்தமே நடக்கும். குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை ஏதாவது காரணம் சொல்லி பெற்றோர் நிராகரிப்பர். குழந்தைக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் பெற்றோருக்காக அவர்கள் வாங்கித் தரும் புத்தகங்களை ஏற்றுக்கொள்கின்றனர். சில குழந்தைகள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை அடம்பிடித்து வாங்கிவிடுவதும் உண்டு. இன்னும் சில பெற்றோர், ‘நான் சொல்றதை வாங்கலைன்னா பாப்கார்ன், ஃப்ரெஞ்ச் ஃபிரை கிடையாது’ என்று அஸ்திரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருகின்றனர்.
புத்தகக் கண்காட்சியைச் சுற்றி வந்தபோது ஓர் அரிய காட்சியைக் கண்டேன். அப்பாவும், ஆறு வயது மகனும் ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வந்தனர். சிறுவன் கையில் ஒரு வெள்ளைத் தாளும், பென்சிலும் இருந்தன. கடை வாசலில் அப்பா நின்று விடுகிறார். சிறுவன் கடைக்குள் சென்று புத்தகங்களை நோட்டம் விடுகிறான். பிறகு, புத்தகத்தையும், கடையின் எண்ணையும் தாளில் குறித்துக்கொள்கிறான். மீண்டும் அடுத்த கடைக்குச் செல்கின்றனர்...
மகன் மீது தன் கருத்தைத் திணிக்காமல், சுதந்தரமாக விட்ட அந்த அப்பா ஓவியர் பிள்ளை. கொஞ்சம் கூட அலுக்காமல், சளைக்காமல் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளையின் பிள்ளை அஸ்வின்.
அஸ்வினிடம் இருந்து தாளை வாங்கிப் பார்த்தேன். அந்தப் பக்கம் முழுவதும் கடை எண்களைக் குறித்து வைத்திருந்தான். விவரம் கேட்டேன். ‘இன்னிக்கு என்னென்ன வாங்கணும்னு நோட் பண்ணிக்கிட்டேன். நாளைக்கு வந்து எல்லாத்தையும் வாங்கிடுவேன்’ என்றான்!
2 comments:
My son, who is 9 years old, is avid reader of your Prodigy titles. He favors heavily English versions than Tamil ones. I would be glad if you bring out all ancient civilizations - Inca, Mayan, Aztec, Egytian, etc - in English versions soon.
உங்கள் பதிவுகள் படிக்க சுவாரசியம்.
குழந்தைகளைப் புரிந்துக் கொள்வது எளிதல்ல. அடுத்தவர் மீது கருத்தைத் திணிப்பது மிகவும் தவறானது.
என்னுடைய அக்காவின் மகன் (எட்டு வயது) ‘பென்10’ கார்ட்டூன் தொடர்பானவற்றையே கேட்கிறான். என்ன செய்ய :)
வெற்றிகரமாகத் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.
Post a Comment