மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!
திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம். அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட் நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள் கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!
கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.
அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!
குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்.
எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.
சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!
பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை!
குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன. கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன.
Tuesday, November 30, 2010
Monday, October 11, 2010
தமிழ் பேப்பர் : பெண் மனம் - 1
ஐயோ, தாத்தா! இது என்ன கால் விரல்ல காயம்?’
‘ ……….’
‘தாத்தா, உங்களைத்தான் கேட்கறேன். கீழே விழுந்துட்டீங்களா?’
‘இல்லம்மா. கோமளாவைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்னைவிட ரொம்பச் சின்னவளா இருந்தும் ஒரு மரியாதை இல்லாம, ரெண்டு நிமிஷம் கழிச்சு நிதானமா வந்து என்னன்னு கேட்டா. வந்துச்சே பாரு ஒரு கோவம்! அப்படியே காலைத் தூக்கி ஒரு எத்து எத்தினேன்…’
‘என்ன சொல்றீங்க தாத்தா! பாட்டி இறந்து 30 வருஷம் ஆச்சு!’
‘ம்… கால் வலிச்சப்பறம்தான் தெரிஞ்சது நான் கண்டது சொப்பனம்னு. கட்டில் கம்பில நல்லா கால் இடிச்சிடுச்சு…’
85 வயது தாத்தா. அவர் மனைவி இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் கனவில் கூடத் தன் மனைவியை இப்படி நடத்தியிருக்கிறார் என்றால், அவர் உயிருடன் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்!
*
பூமியில் உள்ள உயிரினங்களை எல்லாம் அடக்கி ஆண்டுகொண்டிருப்பது மனித இனம். அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட இனமாக இருப்பதும் இந்த இனம்தான். இரண்டே வகை உள்ள இனம். அதில் ஒரு வகை இன்னொரு வகையை இரண்டாம் தரத்தில் வைத்திருக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. பலர் சொல்லி போரடித்துப் போச்சென்று ஓரினம் தொடர்ந்து சொல்லும். எள்ளலும் துள்ளலும் நக்கலுமாக எகத்தாளமிடும். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனம் தோன்றிய நாளாக.
இங்கு பெண்களுக்கு என்று தனியான சிந்தனைகள் இல்லை. செயல்கள் இல்லை. விருப்பங்கள் இல்லை. லட்சியங்கள் இல்லை. ஆசைகள் இல்லை. எல்லாமே காலம் காலமாக ஆண்களால் உருவாக்கப்பட்டவைதான். அடக்கமாக இருக்க வேண்டும். நிமிர்ந்து நடக்கக்கூடாது. உரக்கப் பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது.
வசதியாக இல்லா விட்டாலும் பெண் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் செயல்பட வேண்டும். குறிப்பாக, தங்களுக்குக் கீழாகத்தான் நடக்க வேண்டும் என்று ஆண்களின் ஜீனுக்குள் பொதிந்துகிடக்கும் அபிப்பிராயமே பொதுவான சமூகக் கருத்தாகவும் நிலவுகிறது.
பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மதிப்பீடுகள் அவர்களே உருவாக்கிய மதங்கள், சட்டங்கள், காப்பியங்கள், போதனைகள் மூலமாக வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பெண்கள் பிரச்னை என்பது உண்மையிலேயே உள்ளதுதானா? அத்தனை பெரிய பிரச்னையா? பெண்கள் எல்லோரும் அடிமையாகவா இருக்கிறார்கள்? எதில் இல்லை சுதந்தரம்? பெண்களே பெண்களுக்கு எதிரி?… இப்படிப்பட்ட கேள்விகளைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
பிரச்னை என்றபிறகு பெரிய பிரச்னை என்ன, சிறிய பிரச்னை என்ன? எல்லோரும் அடிமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலும் அடிமைகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பவர்களுக்குத்தான் சுதந்தரத்தின் பொருள் புரியும்.
‘ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள், சரி… இப்போதுதான் பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன?’ என்று கேட்கிறார்கள்.
படிப்பு, வேலை என்பதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது. படிப்பு, வேலை இருப்பதாலேயே பிரச்னை தீர்ந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது. பெண்களைச் சுற்றியுள்ள கூண்டுகளின் கம்பிகள் சற்றுத் தள்ளி நகர்ந்து போயிருக்கின்றன. அவ்வளவுதான்! உண்மையில் சுதந்தரத்தை நோக்கி பெண்கள் செல்லக்கூடிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.
பெண்கள் பிறக்கும்போதே சந்திக்கும் போராட்டம் அவள் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்ற பேதங்கள் எல்லாம் பெண்கள் பிரச்னைகளுக்குக் கிடையாது.
சுமார் 1650 ஆண்டுகளுக்கு முன்…
பண்டைய எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹைபேஷியா. கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கற்றவர். இலக்கியம், கணிதம், தத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர். அவரிடம் கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்தனர். பண்டைய கணித நூல்களை எளிமைப்படுத்தி விளக்க உரைகள் எழுதினார். இவர் எழுதிய நூல்கள் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.
அறிவும் துணிவும் நிரம்பிய ஹைபேஷியா, ஆண்களைப் போலவே உடை அணிவார். தாமாகவே தேர் ஓட்டிச் செல்வார். எனவே, ஹைபேஷியாவை அன்றைய மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. தேரில் வந்துகொண்டிருந்தவரை இழுத்து அடித்து உதைத்தனர். ஆடைகளைப் பிய்த்து எறிந்தனர். உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.
போனது ஹைபேஷா என்ற உன்னதமான ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல; உலகத்துக்குச் சொல்ல வேண்டிய எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்களும் கண்டுபிடிப்புகளும்தான்!
சுமார் 1650 ஆண்டுகளுக்குப் பின் …
1987. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான். 18 வயது இளம் பெண் ரூப் கன்வருக்கு மால் சிங் என்ற 24 வயது நபரைத் திருமணம் செய்த 8 மாதங்களில், கணவர் இறந்து போனார். ரூப் கன்வரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் ஏற்கெனவே ஒழிக்கப்பட்ட ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுதலை அரங்கேற்றி, தங்கள் கோர முகத்தை இன்னொரு முறை உலகத்துக்குக் காட்டிக்கொண்டனர். வேடிக்கை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களுக்கு எதிரே, காப்பாற்ற யாருமின்றி, கதறியபடியே ரூப் கன்வர் நெருப்பில் எரிந்து, கருகிப் போனார்.
ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகச் சாகடித்த பிறகு, ‘சதி மாதா’ என்று கொண்டாடும் உலகம் இது.
இன்றைக்குச் சதி இல்லை. ஆணைப் போல் உடை அணிவதில் பிரச்னை இல்லை. இன்னும் பல இல்லைகள், மேலும் பல உண்டுகள். ஆணுக்கு நிகர் என்று ஆண்களில் சிலரேகூட எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடத் தயார்.
அவ்வளவுதானா? எல்லாமே இருக்கிறதா? பெண்ணடிமைக் காலம் இப்போது / இனி இல்லையா? உண்மைதானா?
இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் ஆண்களுக்கும் உண்டு. சந்தேகமில்லை. ஆனால் ஆண்களுக்கு இல்லாத ஒரு பிரச்னை பெண்ணுக்கு உண்டு. அதுதான் இன்னும் தன் ஆக்டோபஸ் கைகளால் இறுக்கமாக அழுத்திப் பிடித்து வைத்திருக்கிறது.
அது…
0
தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வெளியாகும் பெண் மனம் தொடரின் முதல் அத்தியாயம் இது: இணைய இதழுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

Sunday, September 12, 2010
வேண்டாம் அனுராதா...
15 வயதில் திருமணமாகி, இரு குழந்தைகளுக்குத் தாயாகி, வரதட்சணை பிரச்னையில் விவாகரத்து பெற்றவர் அனுராதா. இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுராதாவை டாக்டர் மனோஜ் நட்பு ஏற்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து, போட்டோ எடுத்திருக்கிறான். பிறகு அதையே காரணம் காட்டி மிரட்டி, உறவு வைத்திருக்கிறான். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவனுடன் குடும்பம் நடத்தியிருக்கிறார் அனுராதா. இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள். போட்டோவை இணையத்தில் போட்டுவிடுவேன் என்று சொல்லியிருக்கிறான் மனோஜ். வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அனுராதா. மனோஜ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
அவர் கொடுத்த புகாரில் மேலும் சில அதிர்ச்சிகள்:
மருத்துவமனையில் பிரசவ வார்டில் வேலையைக் கேட்டு வாங்கிக்கொள்வார். இரவு நேரங்களில்தான் பணிக்குச் செல்வார். பிரசவத்துக்கு வரும் பெண்கள் மயக்க நிலையில் இருக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார். நானே அந்தப் படங்களைப் பார்த்துச் சண்டை போட்டிருக்கிறேன்.
என்னுடைய மகனை அடித்து உதைத்து, கொடுமைப்படுத்துவார். என் பெற்றோரிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டார்.
இப்படி நடந்த விஷயங்களைத் தெளிவாக, பதற்றம் இல்லாமல் தொலைக்காட்சியில் சொல்லும்போது அனுராதாவின் தைரியத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. கடவுளுக்கு அடுத்த நிலையில் நம் மக்கள் மருத்துவர்களைத்தான் நினைக்கிறார்கள். மருத்துவர் என்று வரும்போது அவர் ஆணா, பெண்ணா என்று பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட தொழிலைச் செய்யும் மருத்துவர் மனத்தில் இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம். அருவருப்பாக இருக்கிறது.
அனுராதா தான் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். மானம் போய் விடும் என்ற ஒரு காரணத்துக்காக ஒரு கேடுகெட்டவனோடு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறார். மிரட்டலுக்கு அடி பணிந்தால் அது என்றென்றைக்கும் இன்னும் பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
காலம் கடந்தாவது சமூகத்தைச் சீரழிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த ஒருவனை, வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்திய அனுராதாவை பாராட்டத் தோன்றிய நேரத்தில், அவர் இன்னோர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.
“என்னை எப்படியாவது அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு கேட்டிருக்கேன். இனிமேல் நான் எப்படி வாழ முடியும்?’
அவருடைய வக்கீல் ஜீவகுமாரும், “பெண்கள் பெரும்பாலும் இப்படித்தான் விரும்புகிறார்கள். கல்யாணம் செய்து வைக்கச் சொல்லியிருக்கிறார் அனுராதா’ என்றார்.
இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! தன்னையும் பிற பெண்களையும் கேவலமாகப் படம் எடுக்கும் வக்கிரப்புத்திக் கொண்டவனிடம் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது எவ்வளவு கேவலம்! அனுராதாவுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எதிர்காலத்தில் அவனால் ஆபத்து வராது என்று என்ன நிச்சயம்? ஏற்கெனவே மகன் அவனால் துன்பப்பட்டிருக்கும்போது யாருக்காகச் சேர்ந்து வாழ நினைக்கிறார்? அனுராதா கொடுத்த இந்தப் புகாருக்கே மனோஜால் வெளி வர முடியாது எனும்போது, மருத்துவமனையில் அவன் எடுத்த வீடியோவால் வேலையே பறிபோகாதா? சாதாரணமாகவே சைக்கோவாக இருந்த மனோஜ், தான் தண்டனைக்கு உள்ளாகி, ஊர் முழுவதும் தெரிந்த பிறகு அனுராதாவை எப்படித் திருமணம் செய்துகொள்வான்?
இதுபோன்ற கேள்விகளைக் கூட யோசிக்க விடாமல் ஊடகங்கள், சினிமாக்கள், சமூக அமைப்பு போன்றவை செயல்பட வைக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கிராமத்து பஞ்சாயத்துகளும் சினிமாக்களும் கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அற்புதமான நீதியை அல்லவா வழங்கிக்கொண்டிருக்கின்றன! இங்கு தவறு செய்தவனுக்குப் பரிசும் பாதிக்கப்பட்டவளுக்குத் தண்டனையும் வழங்கும் வினோதமும் தொடர்கதையாக இருக்கின்றன. இப்படிப் பார்த்துப் பார்த்து வளரும் பெண்கள், பிரச்னைகளில் இருந்து வெளிவர நினைக்காமல், எப்படியாவது கணவன் திருந்தி, அவனுடன் வாழ மாட்டோமா என்றுதான் நினைக்கிறார்கள். சமூகப் பார்வை மாறும்வரை அனுராதாக்கள் மீண்டும் மீண்டும் புதைகுழியில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள்.

Monday, September 6, 2010
ஹாஸ்டல் கதைகள் 3 : கன்னியர் தீவு!
ஹாஸ்டல் கதைகள் 1
ஹாஸ்டல் கதைகள் 2
பெண்கள்... பெண்கள்... எங்கும் பெண்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் இடமாகத்தான் இருந்தது எங்கள் பள்ளி. சுமார் இரண்டாயிரம் பெண்கள் படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டன்கள் என்று அத்தனை பேரும் பெண்களாகவே இருந்தார்கள். மொத்தத்தில் அது ஒரு கன்னியர் தீவு!
இதில் இரண்டே இரண்டு ஆண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஒருவர் வாட்ச்மேன். கடுகடு ஆசாமி. எப்போதும் யாரையேனும் திட்டிக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டாலே அலறியடித்து ஒதுங்கிவிடுவார்கள். இன்னொருவர் அந்தோணி அண்ணன். பள்ளிக்குள் சிறிய கடை வைத்திருந்தார். கடையில் இல்லாத பொருள்களைக் கேட்டாலும் மறுநாளே வாங்கிக் கொடுத்து விடுவார். அன்பாகப் பேசுவார்.
பதின்ம வயதுப் பெண்களுக்கு இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பாலோ அல்லது ஹார்மோன்கள் அதிகம் சுரந்ததாலோ ஹாஸ்டல் அக்காக்களுக்கு ஆண்களைப் பற்றிப் பேசுவது என்றால் கொண்டாட்டமாக இருந்தது.
“ மேரி, ஊர்ல இருந்து நான் பதினோரு மணி பஸ்ஸைப் பிடிக்க அம்மாவோட வந்துக்கிட்டிருந்தேன். சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்த டேவிட், திடீர்னு என்னைப் பார்த்து கண்ணடிச்சான். எனக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. பஸ் ஏறி ஜன்னல் வழியா மெதுவா பார்த்தேன், டாடா காண்பிச்சான்... “
“ அந்த மேலத் தெரு டேவிட்டா? அந்தச் சனியன் நான் ரெண்டரை மணி பஸ் பிடிக்க வந்தப்ப என்னைப் பார்த்தும் கண்ணடிச்சான், கை ஆட்டினான்... நான் நல்லா வஞ்சுப்புட்டேன்...’
“நெசமாத்தான் சொல்றீயா மேரி?’
“இல்ல. உன் மேல உள்ள பொறாமையில அவனைப் பத்திச் சொன்னேன். கனவுல மிதக்காம கணக்குப் போடற வழியைப் பாருடி...’
இப்படித் தங்களைப் பாதித்த விஷயங்களையும் ஊரில் பார்த்த, கேட்ட காதல் கதைகளையும் அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள். (வேறு என்னதான் செய்ய முடியும்? பாடப் புத்தகங்கள், பைபிள் தவிர வேறு புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. படிப்பு, பிரார்த்தனை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் இப்படிப் பேசித்தான் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது!)
இந்தச் சிறை வாழ்க்கையில் வாரம் ஒருமுறை மட்டும் நான்கு மணி நேரம் விடுதலை கிடைக்கும். அது ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகும் நேரம். அன்று மட்டும் எல்லோருக்கும் கூடுதல் சுறுசுறுப்பு வந்து விடும். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். அன்று மட்டும் எப்படி வேண்டுமானாலும் தலை வாரிக்கொள்ளலாம். பளிச் நிறங்களில் உடைகள் அணிவார்கள். சர்ச்சுக்குச் செல்லாத மாணவிகளிடமிருந்து பாவாடை, தாவணி எல்லாம் இரவல் வாங்கிக்கொள்வார்கள். இத்தனை நாள் நாம் பார்த்தவர்களா இவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு வசீகரிப்பார்கள்.
காற்றில் அலையும் கூந்தலுடன் இடது கையில் பைபிளைப் பிடித்தபடி அவர்கள் செல்வதைப் பார்க்கும் போது பாரதிராஜா ஹீரோயின்கள் போல இருக்கும்! இரண்டு வரிசைகளாகச் செல்வார்கள். தெருக்கள், வீட்டு ஜன்னல்கள், மாடிகளில் இருந்து இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்! வரிசையில் செல்லும் ஒவ்வொருவரும் தன்னைத்தான் பார்ப்பதாக நினைத்து, சந்தோஷமடைவார்கள். கூட்டத்தில் தன்னை மட்டும் தனித்துக் காட்ட நினைக்கும் பெண்கள், வரிசையை விட்டு விலகி, “ஏய், ஒழுங்காகப் போங்க’ என்று குரல் கொடுப்பார்கள்.
அடுத்த ஞாயிறு வரை பச்சை சட்டைக்காரன், ஒட்டடக்குச்சி, குண்டு பூசணி என்று ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் வைத்து, இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஆண்கள் இல்லாத பாலைவனமாக இருந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், திடீரென்று ஒரு சோலை பூத்தது. தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே குடி வந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மூன்று பேருமே உயர் கல்விக்காக வெளியூர்களில் படித்து வந்தார்கள்.
தலைமை ஆசிரியரின் நெருங்கிய உறவினர்களின் பெண்களும் ஹாஸ்டலில் இருந்தார்கள். ஆனால் உறவினர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் தலைமை ஆசிரியர் சிறிய சலுகைக்கூட காட்ட மாட்டார். அதேசமயம் உறவினர்கள் யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவார். அவ்வளவு கண்டிப்பானவர்.
ஒருநாள் ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து, தோளில் ஒரு பையுடன் ஸ்டைலாக ஓர் இளைஞர் பள்ளி மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தார். யார் அவர்? எல்லோரும் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
“கனி, ஜான் வர்றாங்க... ஜான்...’ என்று பதற்றத்தோடு ஓடி வந்தார் ரத்னா அக்கா.
“ஜான் மட்டும் இல்லை, பின்னாலேயே பெரியம்மாவும் வர்றாங்க...’ என்று கனிமொழி சொன்னதும் ரத்னாவின் முகம் வாடிவிட்டது.
இருவரும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.
“ காலேஜ் போனதும் ஜான் ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்டாங்க இல்ல! நான் நல்லா மேட்ச் ஆவேனா கனி?’ என்று கேட்டார் ரத்னா.
“ஜான் உனக்கு மட்டும் அத்தை மகன் இல்ல. ரீட்டா, பிரின்ஸி கூட முறைப் பெண்கள்தான் ஞாபகம் வச்சுக்க. என் அண்ணன் மனசுல எவ இருக்காளோ’ என்றார் கனிமொழி.
“எனக்குத்தான் சொந்த அத்தை மகன்... எவளும் என் கூடப் போட்டிப் போட முடியாது...’
ஹாஸ்டலுக்கு அருகில் இருந்த தலைமை ஆசிரியர் வீட்டுப் பக்கம் வேண்டுமென்றே மாணவிகள் அடிக்கடிச் செல்வார்கள். ஜன்னல் வழியாக ஜானின் தலை தெரியாதா, தோட்டத்தில் வந்து அமர மாட்டாரா என்று ஏங்குவார்கள். ஆனால் ஒருநாளும் ஜான் யாருக்கும் தரிசனம் தரவில்லை.
அன்று வெளியில் சென்றிருந்த ஜான் பள்ளிக்குள் நுழைந்தார். தலைமை ஆசிரியர் வெளியே போயிருந்த தைரியத்தில் பெண்கள் அவர் கவனத்தைப் பெற நினைத்தார்கள். கொலுசை ஆட்டினார்கள். சத்தம் போட்டுப் பேசினார்கள். ரத்னா அக்கா கொஞ்சம் தைரியமாக இரண்டடி இடைவெளியில் ஜான் கூடவே நடந்து வந்தார். ம்ஹும்... குனிந்த தலை நிமிரவே இல்லை ஜான். எந்த விஷயமும் அவரை அன்னிச்சையாகக் கூடத் திரும்பிப் பார்க்க வைக்கவில்லை! அத்தனைப் பெரிய மைதானத்தையும் கடந்து, வீட்டுக்குள் புகுந்துவிட்டார்.
“என்னங்கடி! என் அண்ணன் கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது. அண்ணன் மேல வச்சிருக்கிற நம்பிக்கையாலதானே பெரியம்மா இங்கே குடி வந்திருக்காங்க! இது கூடத் தெரியாமல் என்னவெல்லாம் பண்ணறீங்கடி! போங்க... போய் தனியா உட்காந்து கனவு காணுங்க...’ என்றார் கனிமொழி.
மாலை ஹாஸ்டல் பக்கமாக வந்தார் தலைமை ஆசிரியர். ரத்னாவைப் பார்த்து, “ என்ன போன மாதத் தேர்வுல மார்க் எல்லாம் குறைஞ்சிருச்சு போல. ஒழுங்கா படிப்புல மட்டும் கவனம் செலுத்து...’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
“நான் ஜான் கூட நடந்து வந்ததை வாட்ச்மேன் போட்டுக்கொடுத்துருச்சு போல...’ என்று ரத்னா பல்லைக் கடித்தார்.

Monday, August 16, 2010
2020ல் இந்தியாவும் மாணவர்களின் கனவும்
· இந்தியா வல்லரசு ஆகியிருக்கும். கூரை வீடுகளே இருக்காது. அனைவரும் மாடி வீடுகளில் குடியிருப்பார்கள்.
· நான் எஞ்சினியராகி இந்தியாவின் கடனை அடைப்பேன். பிறகு இந்தியாவை உயர்த்துவேன்!
· இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் முறியடிக்கப்பட்டிருக்கும்.
· அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
· பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள். வரதட்சணை ஒழிக்கப்பட்டிருக்கும். (மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் குறிப்பிட்டிருந்தனர்)
· இந்தியா பசுஞ்சோலையாக மாறியிருக்கும்.
· இன்று இலங்கை தமிழர்களைப் பாத்துக்கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை இருக்காது. தமிழர்கள் தலை நிமிர்ந்திருப்பார்கள்.
· மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்தியிருப்போம்!
· இன்று ஒரு காபி ரூ.10. தங்கம் ஒரு பவுன் ரூ. 15,000. 2020-ல் இன்னும் பொருளாதாரம் வளர்ந்து கற்பனைக்கு எட்டாத அளவுக்குச் சென்று விடும். (ஐயோ விலை ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சி என்று நினைத்துவிட்டார்களே!)
· பாகிஸ்தான் அடக்கப்பட்டிருக்கும்.
· சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா சரிசமமாகப் போட்டியிடும்.
· எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும்.
· வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்கள்!
· நல்ல அரசியல்வாதிகள் உருவாகியிருப்பார்கள்.
இவை எல்லாம் மாணவர்கள் சொன்ன சில கருத்துகள்.
பூம்புகார் பள்ளியில் ’இந்தியா 2020 என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. பரிசுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பு வாரியாகப் போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய மாற்றம் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆறாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையே மொழியில், விரிவாக எழுதுவதில் வித்தியாசம் இருந்ததே தவிர, அவர்கள் சொன்ன விஷங்களில் மாற்றம் இல்லை!
அப்துல் கலாம், புவி வெப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற விஷயங்களைச் சுமார் 80 சதவிகித கட்டுரைகளில் காண முடிந்தது. 100 சதவிகிதம் இருந்த ஒரு விஷயம் ’வல்லரசு’. வல்லரசு என்றால் அனைவரும் மாடி வீட்டில் வசிப்பது என்று பெரும்பாலும் குறிப்பிட்டிருந்தனர். யார் கொடுத்த விளக்கமோ தெரியவில்லை!

Friday, July 9, 2010
ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!
திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர்.
’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.
அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.
விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’
’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.
கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.
பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.
இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.
**
வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.
நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.
தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)
மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.
’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.
’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’
’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’
’யாருப்பா?’
’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’
’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’
’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’
உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’
’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’
’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.
பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.
’சுஜா, விஷயம் தெரியுமா?’
’என்னக்கா?’
’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.
’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’

Friday, July 2, 2010
சந்தோஷ்
ஆ... ஐயோ...
என்ன ஆச்சு?
மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.
“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.
“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.
சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.
’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.
’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’
’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’
வெடித்து அழுதார் பிருந்தா.
சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
**
’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...
’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...
’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...
’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...
இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.
“வீட்ல யாரும் இல்லையே?’
“இல்ல... என்ன சொல்லுங்க?’
“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’
போனேன்.
ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.
“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...
’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’
“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’
இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.
உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.
’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’
...
’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’
“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’
“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’
“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’
“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’
எனக்குப் பேச்சு வரவில்லை.
“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’
“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?
“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’
“உங்க கையில் என்ன தழும்பு?’
“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’

Subscribe to:
Posts (Atom)