Showing posts with label சுற்றுலா. Show all posts

Wednesday, December 29, 2010
தமிழன் என்று சொல்லடா!
மலேஷியாவுக்குச் சென்றதும் அங்குள்ள நண்பர்கள் பத்து மலையை முதலில் பார்க்கும்படி வற்புறுத்தினார்கள். உலகிலேயே மிக உயரமான முருகனை உருவாக்கிய பெருமிதம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருந்தது கோயில். சற்றுத் தூரத்திலேயே தங்க நிறத்தில் ஜொலித்த முருகன் கண்களில் பட்டார். அகலமான நீண்ட தார்ச்சாலைகளை தவிர்த்து, பத்து மலையைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருக்கக்கூடிய உணர்வு இல்லை. கோயில் அருகே சென்றதும் தமிழ் நாட்டுக் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்தது.
நுழைவாயிலுக்கு முன்பு ஏகப்பட்ட கார்கள் குறுக்கும் நெடுக்குமாக, ஓர் ஒழுங்கின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களுக்கு இடையில் தள்ளு வண்டி கடைகள் இருந்தன. பத்து நாள்களுக்கு முன்புதான் தைப்பூசம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்தக் கொண்டாட்டங்களின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பதால் இப்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். கார்களில் இருந்து இறங்குபவர்கள் அப்படியே இருக்கும் இடத்தில் காரை வைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். மணிக்கணக்கில் பிரார்த்தனை முடித்துவிட்டு வருகிறார்கள். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு, காருக்கு அருகில் வந்து, நடு ரோட்டில் உடை மாற்றுகிறார்கள்.
நுழை வாயிலில் இருந்து வரிசையாகக் கடைகள். பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், இளநீர் கடைகள், ரோஸ், மெஜந்தா, பச்சை வண்ணங்களில் மைசூர் பா, முறுக்கு, ராட்சஷ சைஸில் லட்டு, மிக்சர் என்று ஏகப்பட்ட தின்பண்டங்கள். ஒரு பக்கம் ’வேலய்யா வேலய்யா’ என்று பில்லா படப் பாடல் கந்த சஷ்டி ரேஞ்சுக்குப் பக்தியை ஊட்டிக் கொண்டிருந்தது! இரண்டு, மூன்று ஹோட்டல்கள் இருந்தன. இட்லி, இடியாப்பம், பூரி, தோசை, காபி, டீ என்று இங்கு கிடைக்கும் அத்தனை உணவுகளும் அந்த ஹோட்டல்களில் கிடைக்கின்றன. கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.
முருகனை நெருங்க நெருங்க பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. 140 அடி உயரத்தில் முருகன் சாந்தமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்திய மதிப்புப்படி 2.4 கோடி ரூபாய் இந்தச் சிலைக்குச் செலவாகியிருக்கிறது. முருகனுக்குப் பின்புறம் பத்து மலை குகை இருக்கிறது. 272 படிகளில் ஏறி அந்தக் குகைக்குச் செல்ல வேண்டும். வழியில் குரங்குகளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். அவ்வளவு களைப்புற்று மேலே வந்து சேர்ந்தால், ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான குகை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் தாங்கும் விதத்தில் விசாலமாக இருக்கிறது. குகையை நிமிர்ந்து பார்த்தால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, குழம்பாக வடிந்து, உறைந்துபோன பகுதிகள் காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் வானம் தெரிகிறது. காற்றுப் போவதற்கு இயற்கை அளித்த வசதி.
குகைக்குள் ஒரு பக்கம் மீண்டும் முருகன், பிள்ளையார், சிவன், பார்வதி என்று வரிசையாகக் கோயில்கள். இன்னும் ஒரு 50 படிக்கட்டுகள் ஏறினால் அங்கு இன்னொரு குகை. அங்கும் சில தெய்வங்கள். வெளியில் வெயிலாக இருந்தாலும் குகைக்குள் நல்ல குளிர்ச்சி. குகை வாயிலில் நின்று பார்த்தால் மலேஷியா தெரிகிறது. வாயிலுக்கு அருகில் பத்து மலை முருகன் சிலைகள், மலேஷியாவின் அடையாளமான ட்வின் டவர் பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். படியில் இறங்கும் போது, நன்றாக உடை அணிந்திருந்த ஓர் அம்மா, திடீரென்று கை நீட்டி, பிச்சை கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது.
கோயில் வளாகத்திலேயே குளியலறை, கழிப்பறை, ஓய்வறைகள் எல்லாம் இருக்கின்றன. சிலர் மொட்டை போடுகிறார்கள். சிலர் காது குத்துகிறார்கள். பாவாடை, தாவணி, சுடிதார், சேலை, வேஷ்டிகளில் மக்களைப் பார்க்க முடிந்தது. உடை, பழக்க வழக்கங்கள், கோயில் என்று பலவற்றை தமிழ் நாட்டுப் பாணியில் பின்பற்றினாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்ததில்லை. தாத்தா காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கு மலேஷியாவுக்கு வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உறவுகளை மறந்து, அங்கேயே செட்டில் ஆனவர்கள். அரசாங்கப் பதவிகள், உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிலர் கடைகள், பிசினஸ் என்று சம்பாதிக்கிறார்கள். சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று வசதியாக இருக்கிறார்கள். தங்களை மலேஷியன் தமிழர் என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது ஈழத் தமிழரா என்று கேட்கிறார்கள்.
தைப்பூசம் என்பது மலேஷியாவின் தேசிய விடுமுறை தினம். சிங்கப்பூர், மலேஷியாவிலிருந்து பலரும் அந்த நாளில் பத்து மலையை முற்றுகையிடுவார்களாம். காவடி, கரகம், அலகு குத்துதல் என்று ஊரே களை கட்டுமாம். மலேஷியாவில் தமிழர்கள் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற போக்குவரத்து அத்துமீறல்கள் நடப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னர்கள்.
வாசலுக்கு வந்தோம். ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் சற்றுத் தூரத்தில் இருந்தது. அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது. 'என்ன, தமிழா? எங்கே போகணும்?’ என்று கேட்டார் டிரைவர். நாங்கள் இடத்தைச் சொன்னதும், ‘பத்து ரிங்கட் கொடுத்துடுங்க, தமிழர்ங்கிறதால குறைவா சொல்றேன்’ என்று ஏற்றிக்கொண்டார். இடத்தை விசாரித்து, இறக்கி விட்டார், 'எல்லாத்துலயும் நாணயம் வேணும். நாளைக்கு மலேஷிய தமிழன் ஏமாத்திட்டான்னு உங்க ஊர்ல சொல்லக்கூடாது இல்லையா?’ என்றபடி கிளம்பினார்.
திரும்பி வரும்போது இரவு நேரம். அந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு காரில் ஏறினோம். 5 ரிங்கட் பெற்றுகொண்டு கிளம்பினார் பேரம் பேசாத மலாய்க்காரர்! இங்கிருந்து போகும்போதே ஒரு நண்பர் சொன்னார், ’ தமிழன்னு எந்த வண்டியிலேயும் ஏறாதீங்க, ஏமாத்திருவாங்க’ என்று. அது அப்போதுதான் நினைவுக்கு வந்தது!
Tuesday, November 30, 2010
குதிரைக்கால் அரண்மனையும் பாஞ்சாலங்குறிச்சியும்
மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!
திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம். அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட் நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள் கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!
கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.
அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!
குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்.
எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.
சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!
பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை!
குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன. கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன.

Saturday, March 27, 2010
சுத்தம்.. சோறு.. சிங்கப்பூர்!
மிகப் பிரம்மாண்டமான விமான நிலையம். விமான நிலையத்துக்கு நிகரான ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் வாயிலில் பேருந்து நிலையம். டாக்சி என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், போக்குவரத்து மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது சிங்கப்பூரில். பத்து, பதினைந்து டாலர் கொடுத்து அட்டைகளை வாங்கிவிட்டால் போதும். ரயிலிலும் பேருந்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏறும்போது ஒரு முறை, இறங்கும்போது ஒரு முறை அட்டையைத் தேய்க்க வேண்டும். பணம் காலியாகும் முன் எச்சரிக்கை மணி வருகிறது.
இரண்டு, மூன்று தளங்கள் கொண்ட ரயில் நிலையங்கள். ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலில் பயணம் செய்ய, எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கினால் போதும். ரயில், பேருந்துகள் குளிர்சாதன வசதிகளுடன் இருக்கின்றன. எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு வரவில்லை. வரப் போவது என்ன ஸ்டேஷன், நாம் இறங்கும் ஸ்டேஷன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்கள் மானிட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது தவிர, சீனம், தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. யாருக்கும் உதவி தேவையிருக்கவில்லை. அளவான வேகத்தில் பேருந்து செல்கிறது. நிறைய பேருந்துகள் இருப்பதால் நெருக்கியடிக்கும் கூட்டம் இல்லை. பேருந்திலும் ரயிலிலும் ஒரு சின்னக் காகிதமோ, குப்பையோ கண்ணில் படவில்லை. காகிதம், புகை, உணவு, துரியன் பழம் ஆகியவற்றுக்குத் தடை என்று போட்டிருக்கிறார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனங்களோ, மனிதர்களோ இல்லாவிட்டாலும் கூட பேருந்து ஓட்டுனர்கள் (கேப்டன்கள்) சிக்னலை மதிக்கிறார்கள். சாலையை அவசரமாகக் கடக்க வேண்டும் என்றாலோ, வயதானவர்கள் கடக்க வேண்டும் என்றாலோ சாலை ஓரத்தில் இருக்கும் பட்டனைத் தட்டிவிட்டு, கடக்கலாம்.
ரயில், பேருந்து பயணங்களில் இரைச்சல் இல்லை. மொபைல் போன், லேப்டாப், புத்தகங்களில் மூழ்கிவிடுகிறார்கள். மொபைல் போன் அழைப்புகள் கூட வெளியே கேட்கவில்லை. அமைதியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று “ என் பேரு மீனா குமாரி... என் ஊரு கன்னியாகுமாரி’ என்று நம்மவர்கள் தொலைபேசி அலறுகிறது. கண்ணாடியால் ஆன பெரிய ஜன்னல்கள் வழியே ஊரை ரசித்துக்கொண்டே செல்ல முடிகிறது.
எங்கும் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் கட்டடங்கள். அகலமான தார்ச் சாலைகள். ஆங்காங்கு தெரியும் நிலப் பரப்புகளில் பச்சைப் பசேல் என்று புற்கள் வளர்க்கப்பட்டிருப்பதால், தரையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
லிட்டில் இந்தியா என்று ஓர் இடம். தமிழர்களால் (தமிழர்களுக்கு) நடத்தப்படும் கடைகள். ஒரு கடையில் இளையராஜாவும் இன்னொரு கடையில் சித்ராவும் பாடிக்கொண்டிருந்தார்கள்! மல்லிகை, ரோஜா, தாமரை, கதம்பம் என்று எல்லாப் பூக்களும் மாலைகளும் கிடைக்கின்றன. முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரையிலிருந்து பசலைக் கீரை வரை வாடாமல் வதங்காமல் அணிவகுத்து நிற்கின்றன. காய்கள், பழங்கள் என்று எதற்கும் குறைவில்லை. கோமள விலாஸ் உணவு விடுதியில் இட்லி, தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி என்று டிபன் வகைகளும் சாம்பார், ரசம், மோர், மூன்று காய்கள், பாயசத்துடன் முழு மதிய உணவும் கிடைக்கின்றன. தஞ்சாவூர் டிகிரி காபிக்குப் பெரும்பாலும் தமிழர்களும் சில சீனர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். மளிகை, நகை, துணி, எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் என்று வரிசையாகக் கடைகள். இதே போல் சைனா டவுன் என்ற இடத்தில் சீனர்களின் கடைகள், உணவு விடுதிகள்.
லிட்டில் இந்தியாவைத் தவிர, பெரிய மால்களில் இந்திய உணவுகள் கிடைக்கின்றன. பெரிய ஜூஸ் தம்ளர்களில் காபி அல்லது டீயுடன் உணவைச் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சீன உணவுகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் பொய்க்கும் விதத்தில் ஆச்சரியத்தை அளித்தன. இருபது வகை உணவுகள் கண் முன்னே வைக்கப்பட்டிருந்தன. மீல்ஸ் என்றால் ஒரு கப் சாதம், இரண்டு காய், ஒரு மீன் அல்லது கோழித் துண்டு சேர்ந்தது. சைவம் என்றால் மூன்று காய்கள் வாங்கிக் கொள்ளலாம். நம் விருப்பப்படி காய்களைப் பரிமாறுகிறார்கள். ஒரு காய் குழம்பு போன்று இருக்கிறது. அதைச் சாதத்தின் மேல் ஊற்றுகிறார்கள். உருளைக் கிழங்கு, சோயா உருண்டைகள், கீரை என்று தட்டு நிறைய வைத்துத் தருகிறார்கள். புதுச் சுவையாக இருந்தாலும் எல்லாமே சாப்பிடக்கூடிய ருசியில் இருந்தன. காரம் இல்லை. புளி இல்லை. எண்ணெய் இல்லை. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுகள்! பார்சல் என்றால் ஒரே டப்பாவில் சாதம், மூன்று காய்களைப் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். பொரித்த கோழி, வாத்து இறைச்சிகளும் மீன்களும் எங்கும் கிடைக்கின்றன. பல்வேறு காம்பினேஷன் ஜூஸ்கள்!
சிங்கப்பூரின் மிக அழகான விஷயம் சீனப் பெண்கள். அளவான உயரம், ஒல்லியான உடல், வெண்ணெய் போன்ற நிறத்தில் மெழுகு பொம்மை போல் அத்தனை அழகாக இருக்கிறார்கள். தோடுகளோ வேறு எதுவும் நகைகளோ அணியாமல் மேக் அப் இல்லாமல் அட்டகாசமாகத் தெரிகிறார்கள். குறிப்பிட்ட அளவு சீனர்கள் தமிழர்களைப் போல் தோடு, வளையல், செயின் எல்லாம் அணிந்திருக்கிறார்கள். முழு பேண்ட், முக்கால் பேண்ட்களை வயதான பெண்களில் இருந்து இளம் பெண்கள் வரை அணிகிறார்கள். பதின்ம பருவத்துப் பெண்களை மிகக் குட்டையான டைட் டிராயர்களில் அதிகமாகப் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்வாகு அது போன்ற உடைகளையும் மிகவும் நாகரிகமாகவே காட்டியது.
விமான நிலையம், பேருந்து, ரயில், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் எங்கும் ஓர் ஆண்- ஒரு பெண் என்ற அளவில் பெண்கள் வேலை செய்கிறார்கள். எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களின் தாய் மொழியை, பிரைவேட்டாகவாவது படித்திருக்க வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டமாம். தரமான பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. படித்தவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாகத் தெரிகிறார்கள். படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
சாலை போடும் வேலைகள், கிரேன் ஆப்பரேட்டர்கள், ஆழ்குழாய் கிணறு தோண்டுகிறவர்கள் என்று கடினமான வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ்காரர்களாக இருக்கிறார்கள். அதிலும் பங்களாதேஷ்காரர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற இடங்களில் சீனர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. விமான நிலையம் போன்ற இடங்களில் உள்ள உணவு விடுதிகளில் பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
மக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடங்களில் கூடத் தூசியையோ, குப்பையையோ, எச்சிலையோ பார்க்க முடியவில்லை. அத்தனை சுத்தம். சுவர்களில் ‘தலைவரின் பிறந்தநாள்’ என்ற கிறுக்கல்கள் இல்லை. முகத்தில் அறையும் ஃபிளக்ஸ்கள் இல்லை. காதைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள் இல்லை. பத்துப் பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர் தமிழர்களாக இருக்கிறார்கள்.

சின்ன நாடாக இருப்பதால் இருக்கும் இடத்துக்குள் அத்தனைப்பேரும் வாழ வேண்டிய கட்டாயம். அதனால் பத்து, இருபது மாடிக் கட்டடங்கள் மக்கள் குடியிருப்புகளாக இருக்கின்றன. தனி வீடுகள் மிகவும் குறைவு. மக்கள் ஓரளவு(!) வசதியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் டவுன் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப் பெரிய ஹால், மூன்று அறைகள், நவீன சமையல் அறை, பால்கனியுடன் இருக்கிறது வீடு. வீட்டில் தண்ணீர் தேங்காமல், சுத்தமாக வைத்திருக்கவேண்டும். டவுன் கவுன்சில் அடிக்கடி சோதனை செய்கிறது. சுத்தமாக இல்லாவிட்டால் அபராதம் கட்டவேண்டியதுதான். குடியிருப்புகளின் கீழே குழந்தைகள் விளையாடுவதற்கு என்று மைதானம், சறுக்கு மரம், ஊஞ்சல் என்று நிறைய வசதிகள். கார், சைக்கிள் வைக்க தனி இடம். குடியிருப்புக்குள் இருந்து சாலைக்கு சைக்கிளில் வர, தனி பாதை அமைத்திருக்கிறார்கள்.
லிஃப்டில் ஏறும்போது ஏதாவது பிரச்னை என்றால், லிஃப்டுக்குள் என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று விவரங்கள் உள்ளன. நாங்கள் மாட்டிக் கொண்டபோது, தொலைபேசியில் புகார் செய்து ஐந்து நிமிடங்களுக்குள் டவுன் கவுன்சிலில் இருந்து ஆள்கள் வந்துவிட்டார்கள்.

Tuesday, February 2, 2010
மண் வாசனை!
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் பிரபலமான இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வருவதை விட, அந்த மண், மக்கள், வாழ்க்கை போன்றவற்றையும் தெரிந்துகொண்டால்தான் அந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையடையும். அப்படித்தான் இந்தப் பயணமும் அமைந்தது. கர்நாடகாவின் வட பகுதியில் இருக்கும் பாதாமி, பட்டடக்கல் போன்ற வரலாற்றுச் சின்னங்களைப் பார்ப்பது என்று இலக்கு. ஆனால் பாதாமிக்குப் போகும் முன்பே பல அனுபவங்கள் கிடைத்தன.
பெங்களூருவைத் தாண்டிய ஒரு மணிநேரத்திலேயே நகரத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுகிறது கர்நாடகா. போகும் வழியெங்கும் வெடித்துச் சிரிக்கும் பருத்திக் காடுகள், தலைநிமிர்ந்து நிற்கும் கம்பு, ஒய்யாரமாகக் காட்சியளிக்கும் கமுகு, நடுநடுவே தென்படும் இளம் கரும்பு என்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வரப்புகள். ஏழு மணி நேரப் பயணத்தை அலுப்புத் தெரியாமல் கொண்டு சென்றவை இந்த வயல்களும் ரயிலில் வந்த சக பயணிகளும்தான்!
ஹூப்ளி - தார்வாத் இரண்டும் இரட்டை நகரங்கள். ஹூப்ளியைத் தாண்டி நாற்பது நிமிட பேருந்து பயணத்தில் தார்வாதை அடைந்தோம். ஏராளமான கல்வி நிறுவனங்களும் காட்டன் சிட்டி என்ற புகழும் கொண்ட தார்வாதின் இன்னொரு பெருமை “தார்வாத் பேடா’. பாலில் தயாராகும் இந்தப் பேடா அருமை. மைதாவும் ரவையும் கலந்து பனியாரம் செய்வது போல அங்கு பூரி உருவத்துக்கு இனிப்பான பன் கிடைக்கிறது. இட்லி, தோசை, சாதம், உருளைக் கிழங்கு மசாலா, கத்தரிக்காய் பச்சடி, ரசம், ஊறுகாய், அப்பளம் என்று தாராளமாகக் கிடைக்கின்றன. இட்லி, தோசை, சாதம் எதுவாக இருந்தாலும் சாம்பார் என்று ஒரு குழம்பு கொடுக்கிறார்கள். அதில் விசேஷம் என்னவென்றால் பருப்பும் புளியும் இல்லை! பெங்களூர் கத்தரிக்காய், பீர்க்கங்காய் என்று போட்டுச் செய்யும் குழம்பு மட்டும் நம்மைப் பொருத்தவரை சுவை குறைவாக இருக்கிறது. (இந்தக் குழம்பின் ரகசியம் மட்டும் தெரிந்தால் உச்சத்தில் இருக்கும் துவரம்பருப்புக்கு ஒரு தடா போட்டுவிடலாம்!)
மறுநாள் பாதாமியை நோக்கி அதிகாலையிலேயே புறப்பட்டோம். போக அடம்பிடித்துக்கொண்டு இருந்தது இருள். சில்லென்ற பனி. முக்காடு போட்டபடி வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள் பெண்கள். சில இடங்களில் அறுவடைக்குத் தயாராக நின்றுகொண்டிந்தன சோளப் பயிர்கள். இன்னும் சில இடங்களில் அறுவடை முடித்து, சோளத்தைக் குவித்து வைத்திருந்தார்கள். பாதுகாக்கும் வசதி இல்லாத பெரும்பாலான விவசாயிகள் வயலிலேயே சோளத்தைக் குவித்து, தார்ப்பாலின் போட்டு மூடி வைத்திருந்தார்கள். சில வயல்களில் தோல் உரிக்கப்பட்ட மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமும் கலந்த சோளத்தட்டைகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன.
மெல்லிய வெளிச்சம் வர, நடுநடுவே தென்பட்டன கிராமங்கள். நம் ஊர் மண்பானை வடிவத்தில் பல வண்ணங்களில் பிளாஸ்டிக் பானைகள் எங்கும் வியாபித்திருந்தன. கழிவறை வசதி இல்லாததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அத்தனை பேரும் கையில் பிளாஸ்டிக் செம்புடன் நடந்துகொண்டிருந்தார்கள். தொப்பை இல்லாத வயிறு, விறைப்பான உடல் அவர்களின் உழைப்பை வெளிக்காட்டின. மராத்தி, கன்னடம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். புழுதி கிளம்பும் மண்ணில்தான் வாழ்க்கை என்றாலும் ஆண்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, சட்டையே அணிகிறார்கள். ஆரஞ்சு, கிளிப்பச்சை, மெஜந்தா நிறத் துண்டுகளை தலைப்பாகையாகக் கட்டுகிறார்கள். நிறையப் பேர் காந்தி குல்லா அணிவது ஆச்சரியமாக இருந்தது.
பாதி தூரம் கடந்ததும் மாட்டு வண்டிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் பானைகள், சமையல் பாத்திரங்கள், பெட்டி என்று ஒரு நகரும் வீடாக அந்த வண்டி தெரிந்தது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் டெம்போவை வாடகைக்கு எடுத்து, அதில் கட்டைகளை வைத்து ஓர் அடுக்கை உருவாக்கியிருந்தார்கள். அப்பர் பர்த்தில் ஆண்கள், லோயரில் பெண்கள் என்று பாட்டுக் கேட்டபடி சென்றார்கள். இன்னும் சிலர் ஷேர் ஆட்டோக்களில் இப்படிப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். வழியில் ஓர் ஓடை. அங்கு வண்டிகளை நிறுத்தி, குளியல், சமையல் என்று மக்கள் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள்.
அறுவடை முடிந்ததும் வனசங்கரி என்ற பெண் தெய்வத்துக்கு முதல் காணிக்கை செலுத்துவதற்காகவே, இப்படிச் சில நாள்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று தகவல் தெரிந்தது.
அடடா! பச்சை வண்ணப் பின்னணியில் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகள்... சூரியகாந்தி பூக்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் சந்தோஷம் வந்து உட்கார்ந்துகொண்டது. அந்தத் தோட்டத்தைப் புகைப்படம் எடுக்க மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார் நிலத்தின் சொந்தக்காரர். மாட்டு வண்டி மீது ஏறி எடுத்தால் நல்ல வியூ கிடைக்கும் என்று டிப்ஸும் கொடுத்தார்.
வயல்களையும் கிராமங்களையும் பார்த்து முடித்தபோது, வறண்ட பூமியும் வெக்கையும் கொண்ட ராமநாதபுரத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.

Saturday, January 31, 2009
வித்தை காட்டிய விருந்தாளிகள்!

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் இடம்பெறும். கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் செயல்படுத்தியதில்லை. சென்ற வாரம் எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென்று கிளம்பினோம். தாம்பரத்தில் காலை பதினோரு மணிக்கு பஸ் ஏறினோம். 12 மணிக்கு செங்கல்பட்டு போய்ச் சேர்ந்தோம். மதிய உணவு வாங்கிக்கொண்டு, வேடந்தாங்கல் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏற வேண்டியிருந்தது.
வழியில் பல கிராமங்கள். பொட்டல் வெளிகள். காடுகள். ஏரிகள். கோயில்கள். கடைகள். ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் வேடந்தாங்கல் வந்து இறங்கினோம். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளைப் பற்றிய பொதுவான விஷயங்கள் விளக்கிச் சொல்லப்பட்டிருந்தன. வாடகைக்கு பைனாகுலர்கள் கிடைக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.
ஏரிக் கரையிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் நாரைகள் (Stork) கம்பீரமாக அமர்ந்திருந்தன. இயற்கை சூழலில் மிக அருகில் அவ்வளவு பெரிய பறவைகளைப் பார்த்தது இதுதான் முதல் முறை. 70 சதவிகிதம் வெள்ளையும் வாலில் இளஞ்சிவப்பும் கழுத்து, கால்களுக்கு அருகில் கறுப்பும் கலந்த அற்புதமான இயற்கை கலவை. நீளமான, மெல்லிய உறுதியான கால்கள். இரையைச் சுலபமாகப் பிடிக்கும் விதமாக நீண்ட, கூர்மையான அலகு.
திடீரென்று ஒரு நாரை இறக்கைகளை விரித்தபடி நின்றது. எல்லோரும் வேகமாக கேமராவில் பிடித்தனர். சட்டென்று அப்படியே மேலே எழுந்து வேகமாக ஒரு ரவுண்ட் அடித்தது. பறக்கும் போது இறக்கையைச் சுருக்கிக்கொண்டு, கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி சென்றது. ஓர் அம்பு பறந்து சென்றது போன்ற பிரமை உண்டானது.
நாங்கள் புறச் சூழல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பறவை சர்ரென்று பறந்து, தண்ணீரில் ஏதோ ஓர் இரையை நொடியில் எடுத்துக் கொண்டு, மீண்டும் கூட்டுக்குச் சென்றது.
பறவைகள் யாரையும் கண்டுகொள்ளாமல், தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் நம் பார்வைக்கு, பறவைகள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுவதாகவும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகவும் தோன்றியது. கேமராவுக்கு நாரையைப் போல் மனிதர்கள் கூட ஒத்துழைப்பு தந்திருக்க மாட்டார்கள்.
நுழைந்த இடத்திலேயே வெகு நேரம் நின்று விட்டோம் என்பதை உணர்ந்ததும், நகர ஆரம்பித்தோம். தண்ணீருக்கு நடுவில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் படர்ந்த பச்சை மரங்கள்.( மாங்குரோவ் காடுகள்). ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பெண் பறவைகள் அடை காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் பறவைகள் உணவு தேடி வந்து கொடுக்கின்றன.
ஏரியின் கரையோரம் நிறைய இருக்கைகள். நடுநடுவே ஐம்பது பேர் உட்காரும் அளவுக்கு சிமெண்டால் கட்டப்பட்ட இடங்கள். ஏராளமான குப்பைத் தொட்டிகள். போதுமான கழிவறைகள், சுத்தமாகவும் இருந்தன! சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறவைகளை ஏரியல் வியூவில் பார்க்க வசதியாக இரண்டு பெரிய டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
நாரை இனத்தைச் சேர்ந்த கார்மரண்ட், இக்ரெட் போன்ற பறவைகள் மரங்களில் தென்பட்டன. வித்தியாசமான வாத்துகள் தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டோம்.
வேடந்தாங்கலுக்கு வந்திருக்கும் பறவைகள் எல்லாம் வெளிநாட்டு விருந்தாளிகள். பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்த விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. எல்லாப் பறவைகளும் ஒரே நாட்டைச் சேர்ந்தவை அல்ல. சைபீரியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாட்டிலிருந்தும் பறவைகள் வந்து ஒற்றுமையாகத் தங்கி, குடும்பம் நடத்தி, இனப்பெருக்கம் செய்து, புதிய உறுப்பினர்களுடன் தங்கள் சொந்த மண்ணை அடைகின்றன.
பறவைகள் ஏன் இவ்வளவு தூரம் இடம் பெயர்கின்றன?
பருவ நிலை மாற்றம், இனப் பெருக்கம், உணவு போன்றவை தான் பறவைகளின் இடப் பெயர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள். சைபீரியா போன்ற இடங்களில் இது கடும் குளிர் காலம். உணவும் சரியாகக் கிடைக்காது. இனப் பெருக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பறவைகள் தங்களுக்கு ஏற்றச் சூழல் தேடி பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வருகின்றன.
பறவைகள் பயணிக்கும் பாதையை எப்படி நினைவு வைத்துக்கொள்கின்றன என்பது இன்னும் அறிவியலுக்கு சவாலான கேள்வியாக இருக்கிறது.
நிறைய மக்கள் வருகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் நீண்ட நேரம் தங்குகிறார்கள். பலர் சட்டென்று பார்த்துவிட்டு, சென்று விடுகிறார்கள். மாலை 5.45 - 6.30 வரை உள்ள காட்சிதான் வேடந்தாங்கலின் ஹைலைட்.
நாங்கள் டவர் மீது ஏறி நின்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பஞ்சு வெடித்த பருத்திக் காடு போல பறவைகள் மரங்களில் பூத்திருந்தன. இப்போது பறவைகளின் காச் மூச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. ஐம்பது, நூறு என்ற கணக்கில் பல விதமான பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கித் திரும்பிய காட்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.
இருள் சூழ, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பனி பெய்ய ஆரம்பித்தது. பறவை தோழர்களைப் பிரிய மனமின்றி, கிளம்பினோம். பறவைகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. வாசலுக்கு வந்து புறச் சூழலில் ஐக்கியமாக நேரம் பிடித்தது.
படங்கள் : முகில்
Subscribe to:
Posts (Atom)