Friday, June 25, 2010

ரசிக்க... சிரிக்க...

தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில பெயர்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன; சில பெயர்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன!

நேஷனல் மட்கலன் - National Ceramics
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes
குமார் அடுமனை - Kumar Bakery
மை லேடி தேடல் - My lady’s choice
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks
கேக் அலைகள் - Cake Waves
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi Cosmetics

8 comments:

Anonymous said...

விளம்பர பலகைகள் தமிழில் மாறியது இருக்கட்டும். உங்கள் பெயரை எப்போது இலக்கிய தமிழ் பெயராக மாற்றப் போகிறீர்கள்????

ஆர். முத்துக்குமார் said...

இன்னும் பல சுவாரசியமான தமிழ்ப்பெயர்கள் சந்தைக்கு வந்துள்ளன.

1. அபி வைரவன்ஸ் குழாய் பணி நிறுவனம் - Abi Vairavan's Plumbing Co..

2. தங்கமான தொலைபேசி நடுவகம் - Golden Telephone Centre.

3. காஞ்சி அடுமனைஞர் - Kanchi Bakers

ஆர். முத்துக்குமார்

Anonymous said...

subject: create an archive page in your blog as like writer marudhan. see his archive page here


http://marudhang.blogspot.com/p/archives.html

To create an archive page as like writer marudhan follow steps mentioned here


http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week...)

Unknown said...

.....வெட்டுத் துணி நடுவம் (some Tailor shop) திருவெல்லிக்கேணி அருகே ஆட்டோவில் போகும் போது வாசித்தேன், சரி பார்க்க முடியவில்லை....தமிழ் வாழ்க!

முதலில் அனானிகளை தமிழ்ப் பெயரில் அல்ல சொந்தப் பெயரில் வரச் சொல்லுங்கள், அதன் பிறகு நம் பெயரை செந்தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம் ;)))

unnalmudiyum said...

நல்ல கருத்துக்களை, விமசரிசனங்களை யார் வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம். அத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும்போது பெயர் வெளியிட வேண்டும் என்பது முக்கியமா?
விமரிசனம் முக்கியமா? பெயர் முக்கியமா?
சொந்தப் பெயரில் கருத்தினை வெளியிடும் போது தொடர்ந்து பழகும் நண்பர்களுக்கிடையே விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் அந்த கருத்தினையே தொடர்ந்து விவாதத்திற்குள் உட்பட்டு நேரத்தை வீணடிக்கக்கூடிய கட்டாயத்திற்குள் ஆளாகிறோம். இத்தகைய சிரமங்களை எல்லாம் தவிர்ப்பதற்காகவே தான், ப்ளாக் எழுதும் நண்பர்களும், மற்றவர்களும் அன்னானமிகள் என்ற பெயரில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
அவர்களை சொந்தப் பெயரில் வருவதற்கும் தமிழ் ப்ளாக் எழுதுபவர்களை தமிழ் பெயரில் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டல்லவா?

Anonymous said...

Jothi Cosmetics = ஜோதி ஒப்பனைப்பொருட்கள்
என்பது சரி,
நறுமனப்பொருட்கள் என்பது Perfumes என்பதைக் குறிக்கும்.

Sathish K said...

It is quite interesting to see Tamil names in the commercial establishments.

I always prefer things should come by self rather than by forcing. So I disagree the comments asking to change the names in pure Tamil. By the way, I love Tamil - my mother tongue.

Why should we change the names christned by the parents in name of a language.

Names are identifiers. Names shall be like music. It shall not have language barriers. Names shall be easy to spell, pronounce and pleasant to hear. It need not even have meanings.

- Sathish

Sathish K said...

Sila peyargalai paarkkum pothu - yen peyargalin peyaral thamizhai paadu paduthugirargalo endru thondriyathu.

- Sathish K