Monday, September 7, 2009

கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை?

மாடலிங் துறையில் ஏற்கெனவே சினிமாகாரர்கள், விளையாட்டு வீரர்கள் என்று கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் புகழை வைத்து நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் லாபம், அதில் மாடலாக இருப்பவருக்கும் கோடிக்கணக்கில் வருமானம்! இதில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கிறார் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி! அதுவும் சமூக விழிப்புணர்வு விளம்பரமோ, அரசாங்க விளம்பரமோ அல்ல. ‘இந்த சோப்பைத் தேய்த்தால் தளும்பு மறையும்’ என்று ஒரு சோப்புக்கு மாடலாகப் பணி புரிந்திருக்கிறார். எத்தனையோ இந்தியப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் ரோல்மாடலாகவும் இருந்த கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை? நுகர்வு கலாசாரமும் வியாபார உத்தியும் எந்த அளவுக்குச் சென்றுவிட்டது என்பது இதிலிருந்தே தெரிகிறது. நாளை மன்மோகன் சிங்கும் சோனியாவும் மாடலாக வந்தாலும் ஆச்சரியமில்லை!

5 comments:

Anonymous said...

தற்போதை உலகம் விளம்பர உலகத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. எதற்கெடுத்தாலும் விளம்பரம். காசு கொடுத்தா கேட்கவே வேணாம்.

பிரதிபலிப்பான் said...

இதெல்லாம் கொஞ்சம் over வா தெறியலயா.. உங்களுக்கு மன்மோகனும் சோனியாவும் அவ்வளவு சாதாரணமாகவா போயிட்டாங்க.

ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக இந்திய தேசிய அரசியல் தலைவர்களை இதில் இழுப்பது விரும்பத்தகாத ஒன்று.

எதைப் பற்றியும் தெரியாமல் இது போன்று எழுதுவதென்பது ஏற்றுக் கொள்ளபடலாம் ஆனால் நீங்கள் இப்படி எழுதுவது நன்றாக இல்லை.

தயவு செய்து மீண்டும் இது போல், நாம் மதிக்கும் இந்திய பிரமரைப் பற்றியும் அவரை வழிநடத்திச்செல்லும் அன்னை சோனியாவை பற்றியும் தவறாக எழுத வேண்டாம்.

அரசியல் ரீதியாக அவர்கள் மேல் எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல எல்லோருக்கும் உரிமையுண்டு ஆனால் இது போல் எழுதாதீர்கள்.

Anand said...

உங்களின் சமூக வழிப்புணர்வு கருத்து மேம்பட வாழ்த்துக்கள். மன்மோகன்சிங்கும், சோனியா இந்த விளம்பரத்திற்கு வர வாய்ப்பில்லை. இதைவிட மேலான விளம்பர நோக்குடையவர்கள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பணம் பத்தும் செய்யும்.

Sathish K said...

ஒரு வகையில் அந்த விளம்பரதாரரைப் பாராட்ட வேண்டும். நடிகைகள் மட்டுமல்ல கிரண் சொன்னாலும் மக்கள் வாங்குவார்கள் என்று நம்பியதற்கு.