Wednesday, December 24, 2008

கல்கியும் மேலாண்மை பொன்னுசாமியும்!

சில ஆண்டுகளுக்கு முன் நான் ‘கல்கி’ நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அது கார்கிலில் போர் நடந்துகொண்டிருந்த நேரம். கல்கி பத்திரிகைக்கு எழுத்தாளர்களிடமிருந்து கார்கில் பற்றிய சிறப்புச் சிறுகதைகள் நிறைய வந்துகொண்டிருந்தன. அவற்றில் இருந்து மூன்று தேர்வு செய்யப்பட்டு, பிரசுரமாயின.

தேர்வுக்கு முன்னர் கார்கில் கதைகள் குறித்து எடிட்டோரியலில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. மூன்று கதைகளில் தனக்குப் பிடித்தது ‘மேலாண்மை பொன்னுசாமியின் கதை’ என்றார் துணை ஆசிரியர் இளங்கோவன். (தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர்)

காரணம் என்ன என்றோம்.

‘மற்ற இரண்டு எழுத்தாளர்களும் கார்கில் பற்றி வெளியான செய்திகளைத் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றி கதையாக எழுதியிருந்தார்கள். ஆனால் கார்கில் போரில் உயிரிழந்த ஒருவருடைய உடலைத் தமிழ்நாட்டு கிராமத்துக்கு எடுத்து வருவதை, கதையாகச் சொல்லியிருக்கிறார். உண்மை கற்பனையை விட உயர்வானது. அதுதான் நெஞ்சைத் தொடும்’ என்றார்!

சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள மேலாண்மை பொன்னுசாமிக்கு வாழ்த்துகள்.

2 comments:

anujanya said...

உண்மைதான். நிஜம் போல ஆகாது எந்தப் புனைவும்.

அனுஜன்யா

M.Rishan Shareef said...

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின் கிராமிய மணம் கமழும் எழுத்துக்கள் அருமையானவை. எனக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்ததையிட்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்...!

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !